/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலவாக்கத்தில் புதர் மண்டிய அங்கன்வாடி மைய கட்டடம்
/
சாலவாக்கத்தில் புதர் மண்டிய அங்கன்வாடி மைய கட்டடம்
சாலவாக்கத்தில் புதர் மண்டிய அங்கன்வாடி மைய கட்டடம்
சாலவாக்கத்தில் புதர் மண்டிய அங்கன்வாடி மைய கட்டடம்
ADDED : நவ 17, 2024 12:43 AM

உத்திரமேரூர்,
உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் கிராமத்தில், அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு, அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகள்,கல்வி பயின்று வருகின்றனர்.
முறையாக பராமரிப்பு இல்லாததால், அங்கன்வாடி மைய கட்டடத்தின் பின்புறம் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. புதரிலிருந்து பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷஜந்துக்கள், அங்கன்வாடி மையத்திற்குள் செல்லும், சூழல் அதிகம் உள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனால், குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர்.
மேலும், இங்குள்ள கழிப்பறையும் செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே, அங்கன்வாடி கட்டடத்தின் பின்புறம் வளர்ந்துள்ள,செடி, கொடிகளை அகற்ற, பெற்றோர் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.