/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் குளம் சீரமைக்க பூஜை
/
சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் குளம் சீரமைக்க பூஜை
ADDED : மார் 18, 2024 03:15 AM

ஸ்ரீபெரும்புதுார், :  வடக்குப்பட்டு சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில் குளத்தை, 48 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைப்பதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது.
குன்றத்துார் ஒன்றியம், வடக்குப்பட்டு கிராமத்தில் 100 ஆண்டு பழமையான சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள மூலவர் ஆதிகேசவப் பெருமாள் என்றும், உற்சவர் சுந்தர வரதராஜ பெருமாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இந்த கோவிலுக்கு பின்புறம் உள்ள கோவில் குளம் சிதிலமடைந்து உள்ளது. இதை சீரமைத்து தருமாறு கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதை ஏற்று, கோவில் நிதி 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில். கோவில் குளத்தை சீரமைத்திட ஹிந்து சமய அறநிலையத் துறை உத்தரவிட்டது.
இதையடுத்து, குளத்தை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது.
இதில், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கோதண்டராமன், கோவில் நிர்வாக அதிகாரி செந்தில்குமார், அறங்காவலர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று பணியினைத் துவங்கி வைத்தனர்.

