/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புள்ளலுார் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் ' திக்... திக் '
/
புள்ளலுார் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் ' திக்... திக் '
புள்ளலுார் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் ' திக்... திக் '
புள்ளலுார் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் ' திக்... திக் '
ADDED : டிச 31, 2024 01:26 AM

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த புள்ளலுார் கிராமத்தில் இருந்து, அரங்கநாதபுரம் கிராமத்திற்கு செல்லும் அய்யனேரிக்கரை சாலை உள்ளது. இந்த மண் சாலை வழியாக, சாமந்தி புரம், கொட்டவாக்கம், மணியாட்சி, மூலப்பட்டு உள்ளிட்ட கிராமத்தினர், புள்ளலுார், கணபதிபுரம், சித்துார் ஆகிய கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்த ஏரிக்கரை சாலையை, தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என, பல்வேறு கிராமவாசிகள் கோரிக்கை விடுத்தும், நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் செவிசாய்க்கவில்லைஎன, குற்றம்சாட்டுகின்றனர்.
அவ்வப்போது பெய்து வரும் மழையால், ஏரிக்கரை சாலையில் இருக்கும் மரண பள்ளங்களில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், புள்ளலுார் - அரங்கநாதபுரம் மண் சாலையில், வாகனங்கள் இயக்க முடியாத சூழல் உருவாகிஉள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, ஏரிக்கரை சாலையை தார்ச்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.