/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பம்ப் ஆப்பரேட்டர்கள் நிலுவை தொகை வழங்க மனு
/
பம்ப் ஆப்பரேட்டர்கள் நிலுவை தொகை வழங்க மனு
ADDED : மார் 19, 2025 07:27 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், ஊராட்சி செயலர்கள், பம்ப் ஆப்பரேட்டர், துாய்மை பணியாளர்களுக்கு ஆகியோருக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. இதில், பம்ப் ஆப்பரேட்டர்களுக்கு ஊதியம் மற்றும் நிலுவை ஊதியம் வழங்கவில்லை என, பம்ப் ஆப்பரேட்டர்கள் இடையே புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு ஒன்றியங்களில், பம்ப் ஆப்பரேட்டர்கள் நிலுவை தொகை வழங்கவில்லை என, ஊரக வளர்ச்சி துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் மனுவை, ஊரக வளர்ச்சி துறையினர் விசாரித்து நிலுவை தொகை மற்றும் ஊதியம் கிடைக்க வழி வகை செய்யப்பட்டு உள்ளது என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.