/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் விண்ணப்பிக்க க்யூ.ஆர்., குறியீடு வெளியீடு

ADDED : ஆக 06, 2025 02:14 AM

காஞ்சிபுரம்:'தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் -- 2025'ல், வெவ்வேறு புதிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டு உள்ளன.
பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், மாற்றுத்திறனாளிகள், மக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என, ஐந்து பிரிவுகளில் மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுகளில், போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
மண்டல அளவில் ஏழு வகையான விளையாட்டுகளில் போட்டிகளும், மாநில அளவில் மொத்தமாக 37 வகையான விளையாட்டுகளில், போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில்,விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, 2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான இணையவழியில் விண்ணப்பம் செய்வதற்கான, க்யூ.ஆர்., குறியீட்டை, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று முன்தினம் வெளியிட்டார்.
இப்போட்டிகளில் பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் விளையாட்டு வீரர் - -வீராங்கனையர் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மக்கள் ஆகியோர் தெரிந்துக் கொள்ளும் வகையில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பரப்படுத்த விளையாட்டு அலுவலரிடம், கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தி உள்ளார்.