/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல் குவாரி வாகனங்களால் தம்மனுாரில் விவசாயம் பாதிப்பு
/
கல் குவாரி வாகனங்களால் தம்மனுாரில் விவசாயம் பாதிப்பு
கல் குவாரி வாகனங்களால் தம்மனுாரில் விவசாயம் பாதிப்பு
கல் குவாரி வாகனங்களால் தம்மனுாரில் விவசாயம் பாதிப்பு
ADDED : ஜூலை 28, 2025 01:38 AM

வாலாஜாபாத்:தம்மனுாரில் இயங்கும் தனியார் கல் குவாரி கனரக வாகனங்களின் புழுதியால் சுற்றி உள்ள விவசாய நிலங்கள் பாதிப்பதாக அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வாலாஜாபாத் அடுத்துள்ளது தம்மனுார் கிராமம். தம்மனுார் மற்றும் நெய்க்குப்பம் இடையிலான விவசாய நிலங்களை தனியார் நிறுவனம் விலைக்கு வாங்கி, சில மாதங்களுக்கு முன் கல் குவாரி துவங்கப்பட்டது. இந்த கல் குவாரிக்கு விவசாய நிலங்களையொட்டிய பாதையில் இரவு, பகலாக கனரக வாகனங்கள் இயக்கப் படுகின்றன.
இதனால், கனரக வாகனங்களின் புழுதி சாகுபடி நிலங்களில் பரவி பயிர்கள் பாதித்து வருகின்றன. எனவே, கல் குவாரிக்கு செல்லும் கனரக வாகனங்கள் மூலம், விவசாய நிலங்களில் புழுதி பரவுவதை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.