வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோடை தாகத்தை தீர்கக / கோடை தாகத்தை தீர்கக
/
காஞ்சிபுரம்
கோடை தாகத்தை தீர்கக
ADDED : மார் 01, 2024 12:31 AM
குன்றத்துார்:செம்பரம்பாக்கம் ஏரியில் 21.79 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளதால், இந்தாண்டு சென்னக்கு கோடைகாலத்தில் குடிநீர் சப்ளையில் தட்டுப்பாடு இருக்காது என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் 3.645 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி உயரமும் கொண்டது. வடக்கிழக்கு பருவமழையால் இந்த ஏரி நிரம்பியது. இந்நிலையில், ஆந்திரா, தமிழகம் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து, பூண்டி ஏரியில் இருந்து இணைப்பு கால்வாய் வாயிலாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு ஜன., 29ம் தேதி முதல் 135 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.இதனால் செம்பரம்பாக்கம் ஏரி நீர் மட்டம் மெல்ல உயர்ந்து, 21 அடிக்கு மேல் உள்ளது.நேற்றைய நிலவரப்படி ஏரி நீர் 3.064 டி.எம்.சி.,யாகவும், நீர்மட்டம் உயரம் 21.79 அடியாகவும், நீர் வரத்து 135 கன அடியாகவும் உள்ளது.சென்னை குடிநீர் தேவைக்கு 109 கன அடி நீரும், சிப்காட் மற்றும் விவசாயத்திற்கு தலா 3 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் மற்றும் சிக்கராயபுரம் கல்குவாரி நிரம்பி இருப்பதால் இந்தாண்டு சென்னைக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய முடியும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.