/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெறிநாய்க்கடி தினம் காஞ்சியில் கருத்தரங்கம்
/
வெறிநாய்க்கடி தினம் காஞ்சியில் கருத்தரங்கம்
ADDED : செப் 25, 2024 07:08 PM
காஞ்சிபுரம்:உலக வெறிநாய்க்கடி விழிப்புணர்வு தினத்தையொட்டி, காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்கம் சார்பாக மருத்துவர்களுக்கான தொடர் மருத்துவ கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சு.மனோகரன் வரவேற்று பேசியதாவது:
கடந்தாண்டு, இந்தியாவில் 30.5 லட்சம் பேர்களும், தமிழ்நாட்டில் 4.05 லட்சம் பேர்களும் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாய்களுக்கு தடுப்பூசி போடுவதன் வாயிலாக, அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து அவற்றின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்து கொள்வதன் வாயிலாகவும், கடிபட்டவர்கள் கடித்த இடத்தை தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு ஓடும் குழாய் தண்ணீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
முறையாக 4 அல்லது 5 தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதன் வாயிலாக ரேபிஸ் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை ஸ்ரீசக்ரா கருவாக்க மைய இயக்குனரும், மூத்த சிறப்பு மருத்துவ வல்லுநருமான டாக்டர் வசுந்தரா ஜகன்னாதன் ‛கர்ப்ப பைக்குள் செயற்கையாக ஆண் உயிரணு செலுத்துதல் முறைகளில் வெற்றி வீதத்தை அதிகரித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் உரையாற்றினார்.
மருத்துவ கல்வி செயலர் டாக்டர் ந.சு. ராதாகிருஷ்ணன் அறிமுக உரை நிகழ்த்தினார்.