/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் வெறி நாய் கடி தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்
/
காஞ்சியில் வெறி நாய் கடி தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்
காஞ்சியில் வெறி நாய் கடி தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்
காஞ்சியில் வெறி நாய் கடி தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்
ADDED : டிச 12, 2025 05:56 AM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு, வெறி நாய் கடி தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று துவங்கின.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், சாலையில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. திருக்காலிமேடு பகுதியில் கருத்தடை செய்வதற்கான கட்டடம், உபகரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டன.
தனியார் தொண்டு நிறுவனம் வாயிலாக, கருத்தடை செய்ய துவங்கியபோது, சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என, மாநகராட்சி நிர்வாகம் மீது விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதுதொடர்பாக நீதிமன்ற வழக்கும் தொடரப்பட்டதால், கருத்தடை செய்யும் பணிகள் நின்று போனது.
இந்நிலையில், மாநகராட்சி முழுதும் சுற்றித்திரியும் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை, மாநகராட்சி நிர்வாகம், கால்நடை பராமரிப்பு துறை, விலங்குகள் நல வாரியம் ஆகியோர் இணைந்து மேற்கொள்கின்றனர்.
தடுப்பூசி செலுத்தும் பணியில், நேற்று, 30 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், மாநகராட்சி ஊழியர்களுக்கு, நாய்களை வலை போட்டு பிடிப்பதற்கான பயிற்சியும் வழங்கப்பட்டது.

