/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரயில்வே கடவுப்பாதை சாலை சேதம் நத்தப்பேட்டையில் வாகன ஓட்டிகள் அவதி
/
ரயில்வே கடவுப்பாதை சாலை சேதம் நத்தப்பேட்டையில் வாகன ஓட்டிகள் அவதி
ரயில்வே கடவுப்பாதை சாலை சேதம் நத்தப்பேட்டையில் வாகன ஓட்டிகள் அவதி
ரயில்வே கடவுப்பாதை சாலை சேதம் நத்தப்பேட்டையில் வாகன ஓட்டிகள் அவதி
UPDATED : ஆக 02, 2025 12:30 AM
ADDED : ஆக 02, 2025 12:27 AM

காஞ்சிபுரம்:நத்தப்பேட்டை ரயில்வே கடவுப்பாதை சாலை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
![]() |
காஞ்சிபுரம் அடுத்த, நத்தப்பேட்டை ரயில் நிலைய கடவுப்பாதை சாலையை, சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிக்கு செல்வோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடவுப்பாதையில் இருந்த பழைய தண்டவாளம் மாற்றப்பட்டு, புதிதாக தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக ரயில்வே கடவுப்பாதையில், கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை சேதமடைந்துள்ளது. சேதமடைந்த சாலையை, ரயில்வே நிர்வாகம், தார்கலவை போட்டு முறையாக சீரமைக்கவில்லை.
இதனால், கடவுப்பாதை சாலையை கடக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து, விபத்தில் சிக்குகின்றனர்.
விபத்தை தவிர்க்கும் வகையில், நத்தப்பேட்டை ரயில் நிலைய கடவுப்பாதை சாலையை சீரமைக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.