/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போலீஸ் நிலைய வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்
/
போலீஸ் நிலைய வளாகத்தில் குளம்போல் தேங்கிய மழைநீர்
ADDED : நவ 15, 2024 12:52 AM

ஸ்ரீபெரும்புதுார்:சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுாரில் போலீஸ் நிலையம் உள்ளது. ஒரே வளாகத்தில், ஸ்ரீபெரும்புதுார் சட்டம் - ஒழுங்கு போலீஸ் நிலையம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் இயங்கி வருகின்றன.
இதனால், இங்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் அளிக்க வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டார பகுதிகளில், சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இதனால், போலீஸ் நிலைய வளாகத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
வளாகத்தில் மழைநீர் வடிய, கால்வாய் இல்லாததால், நாள் கணக்கில் தேங்கும் மழைநீரில், கொசு உற்பத்தி பெருகுகிறது. இதானல், கொசுக்கடி தொல்லையில் போலீசார் மற்றும் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். மேலும், விஷ ஜந்துகளின் அபாயமும் உள்ளது.
எனவே, போலீஸ் நிலைய வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற வேண்டும். மேலும், மழைநீர் தேங்காதவாறு, வடிகால்வாய் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.