/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமான சாலையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி
/
சேதமான சாலையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி
சேதமான சாலையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி
சேதமான சாலையில் மழைநீர் தேக்கம் காஞ்சியில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : செப் 30, 2024 06:12 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பழைய ரயில் நிலையம், மாவட்ட விளையாட்டு அரங்கம், மாவட்ட அரசு மருத்துவமனை, வையாவூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் வாகனங்கள் ஹாஸ்பிட்டல் சாலை, ரயில்வே சாலை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் மிகுந்த ஹாஸ்பிட்டல் சாலை, ரயில்வே சாலையுடன் இணையும் பகுதியில் தார்ச்சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால், சாதாரண மழைக்கே குட்டைபோல மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது.
இதனால், மழைநீர் தேங்கியுள்ள இடத்தில், பள்ளம் இருப்பது தெரியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
சாலை சேதமடைந்த இடத்தின் அருகில், மாநகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது.
இவ்வழியாக கமிஷனர், பொறியாளர்கள், மேயர் உள்ளிட்டோர் அன்றாடம் சென்று வருகின்றனர். ஆனால், சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது.
எனவே, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ள இச்சாலையை சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.