/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காலி மனையில் மழைநீர் தேக்கம் நத்தப்பேட்டையில் கொசு தொல்லை
/
காலி மனையில் மழைநீர் தேக்கம் நத்தப்பேட்டையில் கொசு தொல்லை
காலி மனையில் மழைநீர் தேக்கம் நத்தப்பேட்டையில் கொசு தொல்லை
காலி மனையில் மழைநீர் தேக்கம் நத்தப்பேட்டையில் கொசு தொல்லை
ADDED : அக் 25, 2025 11:36 PM

நத்தப்பேட்டை: காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தப்பேட்டை மேட்டு தெருவில், காலி மனையில் தேங்கும் மழைநீரால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, நத்தபேட்டை மேட்டுத் தெருவில், வடிகால்வாய் வசதி இல்லாததால், சில நாட்களாக பெய்து வரும் மழையால் காலி மனையில் குட்டைபோல மழைநீர் தேங்கியுள்ளது.
நாள் கணக்கில் தேங்கும் மழைநீரால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே, காலி மனையில், தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும், இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நத்தப்பேட்டை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.