/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் கால்வாய் அடைப்பு பள்ளி அருகே தண்ணீர் தேக்கம்
/
மழைநீர் கால்வாய் அடைப்பு பள்ளி அருகே தண்ணீர் தேக்கம்
மழைநீர் கால்வாய் அடைப்பு பள்ளி அருகே தண்ணீர் தேக்கம்
மழைநீர் கால்வாய் அடைப்பு பள்ளி அருகே தண்ணீர் தேக்கம்
ADDED : ஜன 30, 2025 12:10 AM

காஞ்சிபுரம் : சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஒட்டி, திருப்புட்குழி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 437 மாணவ - மாணவியர் படித்து வருகின் றனர். இந்த பள்ளி வளாகத்தை ஒட்டி, மழைநீர் வடிகால்வாய் செல்கிறது.
இந்த கால்வாய், சென்னை - பெங்களூருதேசிய நெடுஞ்சாலையொட்டி செல்கிறது. மழைக்காலம் மற்றும் வீணாகும் தண்ணீர் கால்வாய் வழியாக சென்று கொண்டிருந்தது.
தற்போது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியால், மழைநீர் கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், திருப்புட்குழி நடுநிலைப் பள்ளி வளாகம் அருகே தண்ணீர் தேங்கி சாலையில் வழிந்தோடுகிறது. இதில், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும்அபாயம் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, திருப்புட்குழி பள்ளி வளாகம் அருகே, சாலையில் தேங்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.