/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
45 இடங்களில் முடியாத மழைநீர் வடிகால் இணைப்பு பணி
/
45 இடங்களில் முடியாத மழைநீர் வடிகால் இணைப்பு பணி
ADDED : அக் 07, 2024 10:31 PM

சென்னை: சென்னை மாநகராட்சியில், மழைநீர் வடிகால்வாய்களில், 45 இடங்களில் இணைப்பு பணிகள் முடியாததால், அக்., 15ம் தேதிக்குள் முடிக்க, மண்டல அலுவலர்களுக்கு, மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கடந்தாண்டு மழையில் வெள்ள பாதித்த, 180 இடங்களில் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆய்வு கூட்டம்
வடகிழக்கு பருவமழையையொட்டி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து, மண்டல வாரியாக மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் நேற்று ஆய்வு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டம் குறித்து, மாநகராட்சி மேயர் பிரியா பேசியதாவது:
தாழ்வான பகுதிகளில், தேவையான மின் மோட்டார்கள் தயார் நிலையில் வைத்திருத்தல், மழைக்காலங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக விழும் நிலையில் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்கள் மற்றும் அதன் கிளைகள் அகற்றுதல் உள்ளிட்டவை மேற்கொள்ள வேண்டும். 22 சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை வேண்டும்.
தற்போது, 45 இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. 10 - 15 அடி நீளத்தில் தான் இணைப்பு வழங்க வேண்டும் என்பதால், அக்., 15ம் தேதிக்குள் இணைப்பு வழங்க வேண்டும்.
கடந்த காலங்களில், 180 இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்தது. அந்த இடங்களில், மழைநீர் வடிகால் மற்றும் பாதிப்புக்கான காரணம் கண்டறிந்து தீர்வு காணப்பட்டுள்ளது.
எனினும், அப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், முன்செரிக்கை பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மழைகால நிவாரண பணிகளில், ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு, பிரத்யேக 'டி -சர்ட்' வழங்கப்படும். 1919 என்ற புகார் எண்ணில் கூடுதலாக, 50 பேர் நியமிக்கப்பட்டுஉள்ளனர்.
400 முகாம்கள்
மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 400 நிவாரண முகாம்களில், அங்கேயே உணவு தயாரித்து வழங்குவதற்கான பொருட்கள் வழங்கப்பட்டு, மற்றும் சமையல்காரர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இதனால், ஒரு முகாமில் 50 பேர் தங்கினால், அவர்களுக்கான உணவு மட்டுமே தயாரித்து வழங்கப்படும்.
அதேபோல, தாழ்வான பகுதிகளுக்கு, 100 மோட்டார்கள், 36 படகுகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
மாநகராட்சி பணியாளர்களுடன் இணைந்து, நிவாரண பணிகளில் இணைந்து செயல்பட, 10,000 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் தெரிவிக்க, 1913 என்ற தொலைபேசி எண்ணில், 150 கூடுதல் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், 94455 51913 என்ற வாட்ஸ் எண்ணிலும் புகார் மற்றும் தகவல்கள் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
180 இடங்கள் கண்காணிப்பு!
கடந்த காலங்களில், 180 இடங்களில் மழைநீர் தேக்கம் இருந்தது. அந்த இடங்களில், மழைநீர் வடிகால் மற்றும் பாதிப்புக்கான காரணம் கண்டறிந்து தீர்வு காணப்பட்டுள்ளது. எனினும், அப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கவும், முன்செரிக்கை பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மழைகால நிவாரண பணிகளில், ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு, பிரத்யேக 'டி -சர்ட்' வழங்கப்படும். 1919 என்ற புகார் எண்ணில் கூடுதலாக, 50 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- ஜெ.குமரகுருபரன்,
கமிஷனர், சென்னை மாநகராட்சி.