/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் செடிகள் வளர்ந்துள்ளதால் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : செப் 30, 2025 01:29 AM

ஏரிவாய்:ஏரிவாய் கிராமத்தில், வடிகால்வாயில் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை ஊராட்சி, ஏரிவாய் கிராமத்தில் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை ஊராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கால்வாயில் செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளது. இதனால், மழைகாலத்தில், கால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களையும், குடியிருப்பு பகுதியையும் சூழும் நிலை உள்ளது.
எனவே, பருவமழை துவங்குவதற்குள் ஏரிவாய் கிராமத்தில், செடிகள் வளர்ந்துள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க முத்தியால்பேட்டை ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.