/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால் பணி; அரைகுறை சென்னக்குப்பத்தில் வெள்ள பாதிப்பு அபாயம்
/
மழைநீர் வடிகால் பணி; அரைகுறை சென்னக்குப்பத்தில் வெள்ள பாதிப்பு அபாயம்
மழைநீர் வடிகால் பணி; அரைகுறை சென்னக்குப்பத்தில் வெள்ள பாதிப்பு அபாயம்
மழைநீர் வடிகால் பணி; அரைகுறை சென்னக்குப்பத்தில் வெள்ள பாதிப்பு அபாயம்
ADDED : டிச 10, 2024 07:07 AM

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையோரம், அரைகுறையாக விடப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணியால், ஒரகடம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை வெள்ளநீர் சூழும் அபாயம் உள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் மாநில நெடுஞ்சாலை, 25 கி.மீ., துாரம் உடையது. ஒரகடம், சென்னக்குப்பம், மாத்துார், வல்லம், வடகால், போந்துார் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையின் இருபுறமும், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரகடம் அடுத்த சென்னக்குப்பம் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் முழுமை பெறாமல் அரைகுறையாக விடப்படு உள்ளது.
இதனால், ஒவ்வொரு மழையின் போதும், கால்வாய் வழியாக வரும் மழைநீர் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையோரம், சென்னக்குப்பம், ஒரகடம் பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.
இதில், ஒரகடம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள சாலையில், மழைநீர் வடிகால் அரைகுறையாக விடப்பட்டுள்ளதால், மழைநீர் கால்வாய் வழியே செல்லும் வெள்ள நீர், பொன்னியம்மன் கோவில் சாலை வழியாக சென்று, அங்குள்ள குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது.
எனவே, அப்பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அரைகுறையாக விடப்பட்டுள்ள வடிகால்வாயை, ஒரகடம் ஏரியில் மழைநீர் செல்லும் வகையில் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.