/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தென்னனேரியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
/
தென்னனேரியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்
ADDED : நவ 27, 2024 11:07 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது தென்னனேரி கிராமம். இக்கிராமத்தில், பிரதான சாலையையொட்டி, தானாங்குட்டைத் தெரு உள்ளது. இத்தெருவில், 20 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இக்குடியிருப்பு அருகாமையில் உள்ள தனியாரது காலி மனை தாழ்வானதாக உள்ளது. மழைக்காலத்தில் இந்த காலி மனையில் வழிந்தோடும் மழைநீர், தானாங்குட்டை தெரு பகுதி வரை தேங்குகிறது.
இதனால், அப்பகுதியினர், சாலை மற்றும் கடைத்தெரு வந்தடைய தெருவில் தேங்கும் மழைநீரை சிரமத்துடன் கடந்து வரவேண்டி உள்ளது.
மேலும், கனமழை நேரங்களில் தெருவில் மழைநீர் தேக்கம் அதிகரித்து குடியிருப்புகளை சூழ்ந்து கொள்கிறது. அச்சமயம், அப்பகுதியினர் தெருவை கடந்து வெளிய செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. தொடர்ந்து தேக்கமாகும் மழைநீரால், கொசு உற்பத்தி மற்றும் நோய் தொற்றுக்கு வழி வகுக்கிறது.
எனவே, தென்னனேரி, தானாங்குட்டை தெருவில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.