/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரேஷன் கடை சுவரில் விரிசலால் மழைநீர் கசிந்து பொருட்கள் சேதம்
/
ரேஷன் கடை சுவரில் விரிசலால் மழைநீர் கசிந்து பொருட்கள் சேதம்
ரேஷன் கடை சுவரில் விரிசலால் மழைநீர் கசிந்து பொருட்கள் சேதம்
ரேஷன் கடை சுவரில் விரிசலால் மழைநீர் கசிந்து பொருட்கள் சேதம்
ADDED : நவ 28, 2025 04:20 AM

உத்திரமேரூர்: நங்கையர்குளத்தில், ரேஷன் கடை சுவரில் ஏற்பட்டுள்ள விரிசலால், உணவு பொருட்கள் மழைநீரில் சேதமடைந்து வருகின்றன.
உத்திரமேரூர் பேரூராட்சி, நங்கையர்குளம் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த ரேஷன் கடையை பயன்படுத்தி, 100-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள், உணவு பொருட்கள் பெற்று வருகின்றனர்.
வாரத்தில் சனிக்கிழமை மட்டும் இக்கடை திறக்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடை கட்டடம், 25 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு, பராமரிப்பு இல்லாமல் உள்ளது.
கடையின் சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு வருகிறது. விரிசல் ஏற்பட்ட இடங்களை சீரமைக்க, கடை நிர்வாகத்தினர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மழை நேரங்களில் மழைநீர், சுவரில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் வழியே உள்ளே வழிகின்றன. அப்போது, ரேஷன் கடையில் வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள் மழைநீரால் சேதமடைந்து வருகின்றன.
எனவே, சேதமடைந்துள்ள ரேஷன் கடையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் மற்றும் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

