/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கல் குவாரி வாகனங்களால் சேதமடைந்த சாலைகளில் மழைநீர்
/
கல் குவாரி வாகனங்களால் சேதமடைந்த சாலைகளில் மழைநீர்
கல் குவாரி வாகனங்களால் சேதமடைந்த சாலைகளில் மழைநீர்
கல் குவாரி வாகனங்களால் சேதமடைந்த சாலைகளில் மழைநீர்
ADDED : அக் 17, 2024 01:05 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரியில் இருந்து, பினாயூர் மலை வழியாக திருமுக்கூடல் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது. இச்சாலை வழியாக பழவேரி, பினாயூர், சீத்தாவரம் உள்ளிட்ட கிராமத்தினர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர்.
இச்சாலையில், சமீப காலமாக சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் கல்குவாரி மற்றும் கிரஷர்களில் இருந்து இயக்கப்படும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால், பழவேரி சுண்ணாம்பு குளம் அருகாமையிலான சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால் அப்பள்ளங்களில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.
இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே, இச்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீர் செய்ய அப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.