/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் பேருந்து நிலைய கூரை ஓட்டையில் கொட்டும் மழைநீர்
/
உத்திரமேரூர் பேருந்து நிலைய கூரை ஓட்டையில் கொட்டும் மழைநீர்
உத்திரமேரூர் பேருந்து நிலைய கூரை ஓட்டையில் கொட்டும் மழைநீர்
உத்திரமேரூர் பேருந்து நிலைய கூரை ஓட்டையில் கொட்டும் மழைநீர்
ADDED : நவ 15, 2024 12:58 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில், 2015- - -16ம் நிதி ஆண்டில், 60 லட்சம் ரூபாய் செலவில் இரும்பு கூரை அமைக்கப்பட்டது. இந்த கூரையானது, பேருந்துக்காக காத்திருக்கும் பயணியரை,வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கிறது.
தற்போது, கூரை பராமரிப்பு இல்லாமல், சேதமடைந்து ஓட்டை விழுந்துள்ளது. உத்திரமேரூரில், நேற்று காலை 11:00 மணியளவில் திடீரென்று கனமழை பெய்தது.
அப்போது,பேருந்து நிலைய இரும்பு கூரையில் உள்ள ஓட்டையின் வழியே மழைநீர் கொட்டியது. இதனால், பேருந்து நிலையத்திற்கு வந்த பயணியர் அவதிக்கு உள்ளாகினர். எனவே, பேருந்து நிலைய இரும்பு கூரை ஓட்டையை, சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.