/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காலிமனையில் மழைநீர் தேக்கம் சதாவரத்தில் கொசு தொல்லை
/
காலிமனையில் மழைநீர் தேக்கம் சதாவரத்தில் கொசு தொல்லை
காலிமனையில் மழைநீர் தேக்கம் சதாவரத்தில் கொசு தொல்லை
காலிமனையில் மழைநீர் தேக்கம் சதாவரத்தில் கொசு தொல்லை
ADDED : பிப் 15, 2024 12:19 AM

சதாவரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, தும்பவனத்தம்மன் கோவில் குளத்தை ஒட்டியுள்ள கிழக்கு பகுதியான, சதாவரம், கோட்டை காவல் சாலை பகுதியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள காலிமனைகளில் ஒரு மாதத்திற்கு முன் பெய்த மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால், மழைநீரில் பாம்புகள் தஞ்சமடைந்துள்ளதால், குடியிருப்புகளுக்குள் அடிக்கடி பாம்பு புகுந்து விடுவதாக அப்பகுதிவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், மழைநீரால் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது.
எனவே, காலிமனையில், தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும், இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க முறையான வடிகால்வாய் வசதி ஏற்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சதாவரத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.