ADDED : பிப் 13, 2024 10:09 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, அய்யன்பேட்டை கிராமத்தில், நடுத்தெரு பூர்வீக ஸ்ரவாசிகளுக்கு சொந்தமான வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் ரதசப்தமிக்கு தேரோட்டம் நடைபெறும்.
நடப்பாண்டு, நாளை மறுதினம், காலை 7:00 மணி அளவில், வெங்கடேசப் பெருமாள் கோவில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. தேர், முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைய உள்ளது.

