/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரேஷன் குறைதீர் கூட்டம் 122 மனுக்கள் மீது தீர்வு
/
ரேஷன் குறைதீர் கூட்டம் 122 மனுக்கள் மீது தீர்வு
ADDED : ஜூலை 12, 2025 09:10 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து தாலுகாவிலும், நேற்று நடந்த பொது வினியோக குறைதீர் கூட்டத்தில், 122 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டன.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், ஜூலை மாதத்திற்கான பொதுவினியோக குறைதீர் கூட்டம், காஞ்சிபுரம் தாலுகாவில் கீழ்கதிர்பூர் கிராமம், உத்திரமேரூரில் மலையாங்குளம், வாலாஜாபாதில் களக்காட்டூர், ஸ்ரீபெரும்புதுாரில் கீவளூர், குன்றத்துாரில் நாட்டரசன்பட்டு என, ஐந்து தாலுகாவிலும் நேற்று நடந்தது.
இதில், புதிய ரேஷன் கார்டு, நகல் அட்டை, முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம், மொபைல் போன் எண் மாற்றம், அட்டை வகை மாற்றம் என, மாவட்டம் முழுதும் உள்ள ஐந்து தாலுகாவிலும், மொத்தம் 165 மனுக்கள் வரப் பெற்றன.
இதில், தகுந்த ஆவணங்கள் இணைக்கப்பட்ட 122 மனுக்கள் மீது குறைதீர் கூட்டத்தில் உடனடி தீர்வு காணப்பட்டது.
மீதமுள்ள 43 மனுக்கள் மீது உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என, காஞ்சிபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தெரிவித்தார்.