/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எம்பார் கோவிலை சீரமைக்க ரூ.1.08 கோடி கேட்டு பரிந்துரை
/
எம்பார் கோவிலை சீரமைக்க ரூ.1.08 கோடி கேட்டு பரிந்துரை
எம்பார் கோவிலை சீரமைக்க ரூ.1.08 கோடி கேட்டு பரிந்துரை
எம்பார் கோவிலை சீரமைக்க ரூ.1.08 கோடி கேட்டு பரிந்துரை
ADDED : ஜன 25, 2025 09:04 PM
மதுரமங்கலம்:மதுரமங்கலம் கிராமத்தில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் மற்றும் எம்பார் சுவாமிகள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக விளைநிலங்கள் உள்ளன.
இங்கு, சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாள் மற்றும் தை மாதம் எம்பார் அவதார தினம் ஆகிய நாட்களில் தேரோட்டம் நடைபெறும்.
சமீபத்தில், 55 லட்சம் ரூபாய் செலவில், உபயதாரர்களின் பங்களிப்புடன் தேர் சீரமைக்கப்பட்டது. மேலும், 19.40 லட்சம் ரூபாய் செலவில், தேருக்கு கொட்டகை அமைக்கும் பணி நிறைவு பெற்று, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதுதவிர, 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின், 17 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை என, பக்தர்கள் வேதனையாக தெரிவிக்கின்றனர். இதனால், கோவில் பொலிவிழந்து காணப்படுகிறது.
இதை தொடர்ந்து, கோவிலை புதுப்பிக்க வேண்டும் என, பக்தர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. இதையேற்று, ஹிந்து அறநிலையத்துறையினர் 1.08 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசின் பரிந்துரைக்கு அனுப்பி உள்ளனர்.
ஒப்புதல் கிடைத்த பின், கட்டுமான பணிகள் துவக்கப்படும் என, ஹிந்து அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.

