/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு குறைப்பு
/
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு குறைப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு குறைப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு குறைப்பு
ADDED : டிச 17, 2024 09:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார்:சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி, 3.64 டி.எம்.சி., கொள்ளளவும், 24 அடி உயரமும் கொண்டது. கன மழையால் நிரம்பிய இந்த ஏரி, கடந்த 14ம் தேதி திறக்கப்பட்டது.
ஏரியில் இருந்து, 1,000 கன அடியில் துவங்கி, 6,000 கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மழை நின்றபின், படிப்படியாக நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டது.
நேற்று முன்தினம், 3,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நேற்று வெளியேற்றப்படும் நீரின் அளவு, 500 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம் 20.99 அடியாகவும், கொள்ளளவு 2.85 டி.எம்.சி.,யாகவும் உள்ளது.