/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரூ.1.90 கோடியில் பழவேரி சாலை சீரமைப்பு
/
ரூ.1.90 கோடியில் பழவேரி சாலை சீரமைப்பு
ADDED : பிப் 15, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது பழவேரி கிராமம். இங்கிருந்து, அருங்குன்றம் கிராமத்தை இணைக்கும் 2 கி.மீ., துாரமுள்ள சாலை உள்ளது.
பழவேரி, சீத்தாவரம், அரும்புலியூர் உள்ளிட்ட கிராம வாசிகள், இச்சாலையை பயன்படுத்தி வாலாஜாபாத், சாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலை, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
இந்நிலையில், ஒருங்கிணைந்த கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இச்சாலையை சீரமைக்க 1.90 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, இச்சாலையில் உள்ள சிறு பாலங்கள் சீரமைத்தல் பணி தற்போது துவங்கப்பட்டு உள்ளது.

