/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேளாண் பாதிப்பு பற்றி தெரிவிக்க மொபைல்போன் எண் வெளியீடு
/
வேளாண் பாதிப்பு பற்றி தெரிவிக்க மொபைல்போன் எண் வெளியீடு
வேளாண் பாதிப்பு பற்றி தெரிவிக்க மொபைல்போன் எண் வெளியீடு
வேளாண் பாதிப்பு பற்றி தெரிவிக்க மொபைல்போன் எண் வெளியீடு
ADDED : அக் 15, 2024 08:37 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து விவசாயிகளின் விளை நிலங்களை பாதுகாக்க, அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள, கலெக்டர் கலைச்செல்வி ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.
வட்டார அளவில் வேளாண் துறையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, வெள்ள கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக, 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
பருவமழை காலத்தில், வேளாண் விரிவாக்க மையங்களிலும், தனியார் விற்பனை மையங்களிலும், பூச்சிக்கொல்லிகள், விதைகள், உரங்கள் இருப்பு வைக்கப்படும் என வேளாண் துறை தெரிவிக்கிறது.
வெள்ளம் சூழ்ந்த நிலையில், நெற்பயிர்களுக்கான மேலாண்மை நடவடிக்கை விபரங்களை வேளாண் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அறுவடை நிலையாக இருந்தால், வயல்களில் நீர் முழுதுமாக வடிகட்டப்பட வேண்டும். இதனால் தானியங்கள் முளைப்பதையும் தவிர்க்கலாம். அதிகளவு பூச்சி பாதிப்பு ஏற்பட்டால், உரிய பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி நோய் மற்றும் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
மேலும், விபரங்களுக்கு தங்கள் பகுதிக்கான வட்டார வேளாண் விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ளலாம். மேலும், வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகள் தெரிவிக்க 74181 06891 என்ற மொபைல் எண்ணில் தெரிவிக்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.