/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நவரை சாகுபடிக்காக தென்னேரி ஏரியில் தண்ணீர் திறப்பு
/
நவரை சாகுபடிக்காக தென்னேரி ஏரியில் தண்ணீர் திறப்பு
நவரை சாகுபடிக்காக தென்னேரி ஏரியில் தண்ணீர் திறப்பு
நவரை சாகுபடிக்காக தென்னேரி ஏரியில் தண்ணீர் திறப்பு
ADDED : நவ 11, 2024 11:55 PM

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது தென்னேரி கிராமம். இக்கிராமத்தில் உள்ள பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலான ஏரி காஞ்சிபுரம் மாவட்டத்தின் பெரிய ஏரிகளில் ஒன்றானதாகும். 5,345 ஏக்கர் பரப்பிலான இந்த ஏரி, 18 அடி ஆழம் கொள்ளளவு கொண்டதாகவும், 7 மதகுகள் மற்றும் உபரி நீர் வெளியேறக்கூடிய 5 கலங்கல் பகுதிகள் அமைந்துள்ளன.
இந்த ஏரி முழுமையாக நிரம்பினால், அந்த தண்ணீரைக் கொண்டு, தென்னேரி, தென்னேரி அகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 5,858 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
தென்னேரி ஏரியில் தென் மேற்கு பருவமழை உள்ளிட்ட முன்னதாக பெய்த மழைக்கு ஏரியில், 13 அடி ஆழம் கொள்ளளவிற்கு தண்ணீர் சேகரமாகி நீர் இருப்பு உள்ளது.
இதனால், நவரை பருவத்திற்கான சாகுபடி பணிகளை துவங்க, தென்னேரி ஏரியில் இருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அக்கோரிக்கையை ஏற்று, நீர்வளத்துறை சார்பில், தென்னேரி ஏரியின் 4வது மதகு பகுதியில் இருந்து, பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று, ஏரி தண்ணீரை மதகு ஷட்டர் வாயிலாக திறந்து விட்டார்.
காஞ்சிபுரம் நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மார்கண்டேயன் மற்றும் வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன், துணைத் தலைவர் சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.