/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தரைப்பாலத்தில் நீண்டிருந்த கம்பியை அகற்றியதால் நிம்மதி
/
தரைப்பாலத்தில் நீண்டிருந்த கம்பியை அகற்றியதால் நிம்மதி
தரைப்பாலத்தில் நீண்டிருந்த கம்பியை அகற்றியதால் நிம்மதி
தரைப்பாலத்தில் நீண்டிருந்த கம்பியை அகற்றியதால் நிம்மதி
ADDED : மார் 01, 2024 10:52 PM
காஞ்சிபுரம்:செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருத்தணி வரையில், 85 கி.மீ., இரு வழிச்சாலை உள்ளது. இந்த சாலை, சென்னை - கன்னியாகுமரி சாலை விரிவாக்க திட்டத்தில், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
இதில், முத்தியால்பேட்டை கிராம கசக்கால்வாய் குறுக்கே தரைப்பாலம் கட்டுமான பணி, கடந்த 2022ம் ஆண்டு துவங்கி, கடந்தாண்டு இறுதியில் நிறைவு பெற்றது.
இருப்பினும், பாலத்தின் தடுப்பு சுவரின் ஓரம், இரும்பு கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் கால்களில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, நான்கு வழி சாலை விரிவாக்க அதிகாரிகள் பாலத்தின் ஓரம் இருந்த கம்பிகளை வெட்டி அகற்றினர். இனிமேல், கம்பியால் விபத்து ஏற்படாது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.