/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
போக்கு காட்டும் மழையால் நாற்று உற்பத்தி செய்ய தயக்கம்
/
போக்கு காட்டும் மழையால் நாற்று உற்பத்தி செய்ய தயக்கம்
போக்கு காட்டும் மழையால் நாற்று உற்பத்தி செய்ய தயக்கம்
போக்கு காட்டும் மழையால் நாற்று உற்பத்தி செய்ய தயக்கம்
ADDED : நவ 26, 2024 03:57 AM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டின்கீழ், 92 ஏரிகள், ஒன்றிய கட்டுப்பாட்டின்கீழ், 124 ஏரிகள் என, மொத்தம் 216 ஏரிகள் உள்ளன.
ஒன்றியத்தில் உள்ள மொத்த விவசாய நிலப்பரப்பில், 60 - 70 சதவீதம் வரை, ஏரிநீர் பாசனத்தை கொண்ட விவசாய நிலங்களாக உள்ளன.
இப்பகுதிகளின் ஏரிகள் முழுமையாக நிரம்பினால், இரு போகம், சில இடங்களில் மூன்று போகம் என, விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் துவங்கியும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை போதிய அளவு மழை பெய்யவில்லை.
இதனால், உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் சம்பா பட்ட சாகுபடி பணிகளுக்கு நாற்று உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகளில் விவசாயிகள் ஆர்வம் காட்டாமல் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, பட்டா கிராம விவசாயிகள் கூறியதாவது:
சம்பா பட்டத்திற்கான நடவு பணிகளை, ஜனவரி மாத துவக்கத்தில் துவக்கி விடுவது வழக்கம். இதற்காக, நவம்பர் மாத இறுதியில், நாற்று விடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வோம்.
இந்த ஆண்டு இதுவரை போதிய மழை பெய்யாததால், ஏரிகள் நிரம்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனால், மழையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.