sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வேகவதி ஆறு ஆக்கிரமிப்பு அகற்றுவதில் மெத்தனம்

/

வேகவதி ஆறு ஆக்கிரமிப்பு அகற்றுவதில் மெத்தனம்

வேகவதி ஆறு ஆக்கிரமிப்பு அகற்றுவதில் மெத்தனம்

வேகவதி ஆறு ஆக்கிரமிப்பு அகற்றுவதில் மெத்தனம்


ADDED : ஏப் 04, 2025 09:41 PM

Google News

ADDED : ஏப் 04, 2025 09:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. குறிப்பாக நீர்நிலை ஆக்கிரமிப்பு நிலங்கள் ஏக்கர் கணக்கில் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன.

அதில் முதன்மையானதாக, காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் அப்படியே உள்ளன. அடுத்தபடியாக, மணிமங்கலம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி, அணைக்கட்டுதாங்கல் ஏரியின் ஆக்கிரமிப்புகள் போன்றவை பெரிய அளவில் அளவில் ஆக்கிரமிப்புகளாக உள்ளன.

வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு, கீழ்கதிர்பூர் கிராமத்தில், 200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டன.

இந்த வீடுகள் பெரும்பாலும் நிரம்பிய நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் வேகவதி ஆற்றிலேயே ஆக்கிரமிப்பு வீடுகளில் குடியிருக்கின்றனர்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் கட்டி தரப்பட்டும், அவர்களை காலி செய்ய வைக்க வேண்டிய நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்து வருவதாக, நகர மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது அகற்றாததால், தி.மு.க., அரசு அமைந்த பிறகாவது, இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, ஆறு முழுமையாக மீட்டெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தி.மு.க., அரசு அமைந்து 4 ஆண்டுகளான நிலையில், இதுவரை அந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றாமலேயே உள்ளன.

மேலும், 2021 மற்றும் 2022 ஆகிய இரு ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆக்கிரமிப்பு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பலரும் பாதிக்கப்பட்டனர். இருப்பினும், அந்த வீடுகளை அகற்ற மறுப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

காஞ்சிபுரம் வருவாய் கோட்டத்திற்கு ஐ.ஏ.எஸ்.,அதிகாரியாக ஆஷிக் அலி என்பவர் சில மாதங்கள் முன்பாக நியமிக்கப்பட்டார். புதிதாக ஐ.ஏ.எஸ்., அதிகாரியே நியமிக்கப்பட்டு இருப்பதால், இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், வேகவதி ஆறு ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மவுனமாக இருப்பு ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us