/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் விழுந்த மரக்கிளை அகற்றம்
/
சாலையில் விழுந்த மரக்கிளை அகற்றம்
ADDED : அக் 19, 2025 09:49 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையோரம், நேற்று அதிகாலை முறிந்து விழுந்த மரக்கிளையை தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர்.
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை வழியாக சுற்றுவட்டார ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், காஞ்சிபுரம் பல்லவன் நகர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அலுவலகம் அருகில், சாலையோரம் உள்ள 25 ஆண்டுகள் பழமையான காட்டு வாகை மரத்தின் கிளை நேற்று அதிகாலை 4:30 மணியளவில் முறிந்து விழுந்தது.
அதிகாலை நேரம் என்பதால், வாகன போக்குவரத்து அதிகம் இல்லாததால், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், சாலையின் ஒரு பக்கம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து, தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், நெடுஞ்சாலைத் துறையின் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக விழுந்து கிடந்த மரக்கிளை ஒரு மணி நேரம் போராட்டத்திற்குப்பின் வெட்டி அகற்றினர்.
அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க, ஒரு வழிபாதையில் வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டு இருந்தது.