/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ரயில்வே மேம்பாலத்தில் மணல் குவியல் அகற்றம்
/
ரயில்வே மேம்பாலத்தில் மணல் குவியல் அகற்றம்
ADDED : பிப் 12, 2025 12:25 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இருந்து பரந்துார், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி வழியாக, சென்னை - கோயம்பேடு செல்லும் இருசக்கரம், கார், வேன், லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் புதிதாக கட்டப்பட்டு, 2022ம் ஆண்டு திறக்கப்பட்ட ரயில்வே மேம்பாலம் வழியாக செல்கின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள மேம்பாலத்தின், இரு வழி சாலையோரத்திலும் மணல் குவிந்து இருந்தது. போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை சார்பில், ரயில்வே மேம்பாலத்தின் சாலையோரம் இருந்த மணல் குவியல் நேற்று அகற்றப்பட்டது.