/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் புனரமைக்கப்பட்ட கைத்தறி சங்க விற்பனை நிலையம் திறப்பு
/
காஞ்சியில் புனரமைக்கப்பட்ட கைத்தறி சங்க விற்பனை நிலையம் திறப்பு
காஞ்சியில் புனரமைக்கப்பட்ட கைத்தறி சங்க விற்பனை நிலையம் திறப்பு
காஞ்சியில் புனரமைக்கப்பட்ட கைத்தறி சங்க விற்பனை நிலையம் திறப்பு
ADDED : அக் 31, 2025 10:14 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் முருகன் கைத்தறி பட்டு கூட்டுறவு சங்கத்தின், புனரமைக்கப்பட்ட விற்பனை நிலையத்தை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேற்று திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம், எண்ணெய்க்கார தெருவில் உள்ள காஞ்சிபுரம் முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கட்டடம், கைத்தறி துறை சார்பில், கைத்தறி ஆதரவு திட்டத்தின் கீழ், 65 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, டெண்டர் விடப்பட்டு புனரமைப்பு பணிகள் துவங்கி நடந்தன. புனரமைப்புக்கான திட்டத் தொகையில் அரசு மானியமாக, 75 சதவீதமும், சங்கத்தின் பங்கு 25 சதவீதமாக உள்ளது.
தரைத்தளத்தில் 765 சதுரடிக்கும், முதல் தளம் 765 சதுரடி என, மொத்தம் 1,530 சதுர அடி பணிகள் முடிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய விற்பனை நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை நிலையத்தை, கைத்தறி துறை அமைச்சர் காந்தி நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கைத்தறி துறை அரசு முதன்மை செயலர் அமுதவல்லி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, காஞ்சிபுரம் தி.மு.க.,- -எம்.பி., செல்வம், காஞ்சி தி.மு.க., - -எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி, முருகன் கைத்தறி சங்கத் தலைவர் முத்துசெல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

