/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடு பாலத்தில் நடைபாதை சீரமைப்பு
/
செவிலிமேடு பாலத்தில் நடைபாதை சீரமைப்பு
ADDED : டிச 02, 2024 02:28 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில், செவிலிமேடு - புஞ்சையரசந்தாங்கல் கிராமத்திற்கு இடையே உள்ள பாலாற்றின் குறுக்கே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் உள்ளது. இந்த பாலம் வழியாக அய்யங்கார்குளம் பெருநகர், மானாம்பதி, வந்தவாசி, திருவண்ணாமலை, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இப்பாலத்தின் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பழுதடைந்து நின்றாலோ அல்லது பாலத்தின் மீது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவிற்கு நீண்டதுாரத்திற்கு வாகன நெரிசல் ஏற்படுகிறது.
எனவே, பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை இருசக்கர வாகன போக்குவரத்துக்கு ஏற்ப தயார் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை சார்பில், செவிலிமேடு உயர்மட்ட பாலத்தின் இருவழித் தடங்களில் உள்ள நடைபாதையை இருசக்கர வாகனங்கள் சென்று வருவதற்கு ஏற்ப சமன் செய்யப்பட்டு நேற்று சீரமைக்கப்பட்டது.
பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்காமல் நடைபாதை சாலையை பயன்படுத்திக் கொள்ளலாம் என, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.