/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செவிலிமேடில் சேதமான சாலை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைப்பு
/
செவிலிமேடில் சேதமான சாலை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைப்பு
செவிலிமேடில் சேதமான சாலை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைப்பு
செவிலிமேடில் சேதமான சாலை ‛பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைப்பு
ADDED : ஏப் 14, 2025 12:51 AM

செவிலிமேடு:காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை வழியாக, அய்யங்கார்குளம், பெருநகர், மானாம்பதி, வந்தவாசி, செய்யாறு, ஆரணி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர் செவிலிமேடு வழியாக சென்று வருகின்றனர்.
கனரக வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், ஆங்காங்ககே சாலை சேதமடைந்த நிலையில் இருந்தது. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தில் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது.
இதனால், சேதமடைந்த சாலையை பேட்ச் ஒர்க் பணியாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் உபகோட்டம், நெடுஞ்சாலைத் துறை சார்பில், செவிலிமேடில் சேதமடைந்த சாலை, ரெடிமேட் தார் கலவை வாயிலாக பேட்ச் ஒர்க் பணியாக நேற்று சீரமைக்கப்பட்டது.
இதேபோல, மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்சக்கரபுரம் தெரு, வணிகர் வீதி, பத்ரகாளியம்மன் கோவில் தெரு, அப்பாராவ் உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த நிலையில் உள்ள சாலையை, 'பேட்ச் ஒர்க்' பணியாக சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.