/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மூடியே கிடக்கும் நுாலகத்திற்கு ரூ.54,000ல் சீரமைப்பு பணி
/
மூடியே கிடக்கும் நுாலகத்திற்கு ரூ.54,000ல் சீரமைப்பு பணி
மூடியே கிடக்கும் நுாலகத்திற்கு ரூ.54,000ல் சீரமைப்பு பணி
மூடியே கிடக்கும் நுாலகத்திற்கு ரூ.54,000ல் சீரமைப்பு பணி
ADDED : பிப் 15, 2024 12:47 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் பின்புறம் சிறுகாவேரிபாக்கம் ஊராட்சிக்கான நுாலகம் இயங்கி வருகிறது.
திறக்கப்படாமல் எப்போதும் மூடியே கிடக்கும் நுாலகத்திற்கு வாசகர்கள் செல்ல முறையான பாதை வசதி இல்லை.
இருப்பினும், முறையாக திறக்கப்பட்டு பயன்பாட்டில் இல்லாத நுாலகத்திற்கு, 2022 - -23ல், ஒன்றிய பொது நிதியில் இருந்து 54,000 ரூபாய் செலவில் புனரமைப்பு பணி நடந்துள்ளதாக நுாலக சுவரில் எழுதப்பட்டுள்ளது.
திறக்கப்படாத நுாலகத்திற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஊராட்சி நிதியை வீணடித்துள்ளனர். நுாலகத்திற்கு பாதை வசதி ஏற்படுத்தி, தினமும் நுாலகத்தை திறந்து முறையாக பராமரிக்க வேண்டும் என, சிறுகாவேரிபாக்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில், ''சிறுகாவேரிபாக்கம் ஊராட்சியில் உள்ள நுாலகத்தை ஆய்வு செய்து, நுாலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

