/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகவதியில் தடுப்பணை கட்ட குறைதீர் கூட்டத்தில் வேண்டுகோள்
/
வேகவதியில் தடுப்பணை கட்ட குறைதீர் கூட்டத்தில் வேண்டுகோள்
வேகவதியில் தடுப்பணை கட்ட குறைதீர் கூட்டத்தில் வேண்டுகோள்
வேகவதியில் தடுப்பணை கட்ட குறைதீர் கூட்டத்தில் வேண்டுகோள்
ADDED : நவ 10, 2025 11:20 PM
காஞ்சிபுரம்: 'வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடுப்பணைகள் கட்ட வேண்டும்' என, குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் தலைமையில், நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது. இதில், பட்டா, உதவித்தொகை, ரேஷன் அட்டை, ஆக்கிரமிப்பு என, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 411 பேர் மனு அளித்தனர்.
மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், வேகவதி ஆற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தடுப்பணை கட்ட வேண்டும் என, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராமசாமி என்பவர் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கிளார் முதல் திருமுக்கூடல் வரையிலான, 20 கி.மீ., வரை வேகவதி ஆறு பாய்கிறது. ஆற்றின் இரு கரையோரங்களில், 2 லட்சம் ஏக்கரில் விவசாய பணி நடந்து வருகிறது.
ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியது போல், வேகவதி ஆற்றின் ஆக்கிரமிப்புகளையும் அகற்றி, தடுப்பணை கட்ட வேண்டும். இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு, விவசாய நிலத்தின் பரப்பு அதிகரிக்கும்.
வேகவதி ஆற்றை மீட்டெடுக்க, ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்பணை கட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

