/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேலுடன் கோவிலுக்கு செல்ல முயன்றோர் கைது
/
வேலுடன் கோவிலுக்கு செல்ல முயன்றோர் கைது
ADDED : நவ 10, 2025 11:19 PM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவிலில், வேலுடன் செல்ல முயன்ற ஹிந்து முன்னணியினர், 12 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவிலில், கடந்த மாதம் நடந்த சஷ்டி விழாவின்போது, பா.ஜ., - ஹிந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள், வேலுடன் கோவிலுக்கு செல்ல முயன்றனர்.
ஆனால், அறநிலையத் துறை அனுமதி மறுத்ததால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். நீண்ட வாக்குவாதத்திற்கு பின், கோவிலுக்கு வெளியே வேலுடன் வழிபட்டு சென்றனர்.
இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், மாவட்ட தலைவர் சிவானந்தம் தலைமையில், காஞ்சிபுரம் குமரகோட்டம் கோவி லில், வேலுடன் செல்ல நேற்று முயன்றனர்.
கோவில் செயல் அலுவலர் அனுமதி மறுத்த தால், போலீசார் நேற்றும் அவர்களை தடுத்தனர்.
இதையடுத்து, கோவிலுக்குள் செல்ல முயன்ற, ஹிந்து முன்னணியை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

