/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மேல்நிலை தொட்டி சேதம் திருவீதிபள்ளம் மக்கள் அச்சம்
/
மேல்நிலை தொட்டி சேதம் திருவீதிபள்ளம் மக்கள் அச்சம்
மேல்நிலை தொட்டி சேதம் திருவீதிபள்ளம் மக்கள் அச்சம்
மேல்நிலை தொட்டி சேதம் திருவீதிபள்ளம் மக்கள் அச்சம்
ADDED : நவ 10, 2025 11:19 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி திருவீதிபள்ளம் பகுதியில், பயன்பாட்டின்றி சேதம் அடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 25வது வார்டு திருவீதிபள்ளம் எம்.ஜி.ஆர்., நகர் மற்றும் சுற்றியுள்ள வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், 2010ம் ஆண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, அப்பகுதி யினருக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.
மூன்று ஆண்டுகளுக்கு முன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்தது.
இதனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்படுத்துவதை மாநகராட்சி நிர்வாகம் கைவிட்டது. கைவிடப்பட்ட தொட்டியை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்தாண்டு மேல்நிலை தொட்டியை இடிக்கும் பணி துவக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அருகே வசிப்போர், ஒருவித அச்சத்துடன் உள்ளனர்.
எனவே, ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருவீதிபள்ளம் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

