/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஊத்துக்காடில் வாகன திருட்டை தடுக்க போலீசார் ரோந்து வர கோரிக்கை
/
ஊத்துக்காடில் வாகன திருட்டை தடுக்க போலீசார் ரோந்து வர கோரிக்கை
ஊத்துக்காடில் வாகன திருட்டை தடுக்க போலீசார் ரோந்து வர கோரிக்கை
ஊத்துக்காடில் வாகன திருட்டை தடுக்க போலீசார் ரோந்து வர கோரிக்கை
ADDED : ஜூலை 20, 2025 10:24 PM
வாலாஜாபாத்:ஊத்துக்காடு சுற்று வட்டார பகுதிகளில் வாகன திருட்டு சம்பவங்களை தடுக்க, போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
ஊத்துக்காடு மற்றும் ஜே.எஸ்., நகர் உள்ளிட்ட பகுதிகளில், சில நாட்களாக இருசக்கர வாகன திருட்டு அதிகரித்துள்ளது.
ஊத்துக்காடு, ஜே.எஸ்., நகர் பகுதி மக்கள் கூறியதாவது:
ஊத்துக்காடு, ஜே.எஸ்., நகர் பகுதியில் இரண்டு மாதங்களில் நான்கு இருசக்கர வாகனங்கள் திருடு போய் உள்ளது. கடந்த 12ம் தேதி இரவு ஆனந்த்பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனமும், 13ம் தேதி இரவு மணிகண்டன் என்பவரது இருசக்கர வாகனமும் வீட்டு வாசலில் நிறுத்தம் செய்யப்பட்டிருந்து அடுத்தடுத்த நாட்களில் காணாமல் போனது.
இதுகுறித்து, வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா சில இடங்களில் பழுதடைந்துள்ளது.
இதனால், திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டறிவதில் போலீசார் திணறுகின்றனர். எனவே, இப்பகுதிகளில் போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்தி திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு அவர்கள் கூறினர்.

