/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
இலவசமாக மனு எழுதி தர ஆட்கள் நியமிக்க கோரிக்கை
/
இலவசமாக மனு எழுதி தர ஆட்கள் நியமிக்க கோரிக்கை
ADDED : டிச 26, 2025 06:01 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில், இலவசமாக மனுக்களை எழுதி தர, ஊழியர்களை நியமிக்க வேண்டும் என, நகர மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையன்று, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது.
இக்கூட்டத்திற்கு வரும் மக்கள் பலருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ், அதிகாரிகள் வாயிலாக இலவசமாக மனுக்கள் எழுதி தருகின்றனர்.
அதுபோல, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் இலவசமாக மனுக்கள் எழுதி தர வேண்டும் என, நகர மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மாநகராட்சி வளாகத்தில், 30 ரூபாய்க்கு மனுக்கள் எழுதி தர, சிலர் நாள் முழுதும் அமர்ந்திருக்கின்றனர். எழுத, படிக்க தெரியாதவர்கள் இவர்களிடம் மனுக்களை எழுதி பெற்று, மாநகராட்சி அதிகாரி களிடம் அளிக்கின்றனர்.
கலெக்டர் அலுவலகத்தில் இலவசமாக மனுக்களை எழுதி தருவதுபோல, மாநகராட்சியிலும் ஊழியர்களை நியமிக்க, நகர மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த நடைமுறையை, ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள் போன்றவர்களை, மாநகராட்சி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என, நகர மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

