/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தண்டலம் கூட்டுசாலையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
/
தண்டலம் கூட்டுசாலையில் மேம்பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 30, 2024 09:34 PM

தண்டலம்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையும், பேரம்பாக்கம் - -தண்டலம் நெடுஞ்சாலையும் இணையும் தண்டலம் கூட்டுசாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்டது. விபத்தை தடுக்க மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம், சந்தவேலுார் ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதேப்போல தண்டலம் கூட்டுசாலையில் விபத்தை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஐந்து ஆண்டுகளில் இந்த சாலை சந்திப்பில் 30க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தண்டலம் கூட்டுசாலையில் போலீசார் பணியில் இருப்பதில்லை. தானியங்கி சிக்னலும் இயங்குவதில்லை.
இதனால், அடிக்கடி விபத்து நடக்கிறது. இந்த பகுதியை அச்சத்துடன் வாகன ஓட்டிகள் கடந்து செல்கின்றனர்.
இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.