/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருதம் கூட்டுச்சாலையை தரமாக செப்பணிட கோரிக்கை
/
மருதம் கூட்டுச்சாலையை தரமாக செப்பணிட கோரிக்கை
ADDED : ஆக 17, 2025 01:26 AM

காஞ்சிபுரம்:மருதம் கூட்டுச்சாலை மீண்டும் சேதமடைய வாய்ப்புள்ளதால், தரமாக செப்பணிட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மருதம் கூட்டு சாலையில் இருந்து, புத்தகரம் கிராமம் வழியாக, ஊத்துக்காடு கிராமத்திற்கு சாலை செல்கிறது. இச்சாலை, முதல்வர் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மூன்று மாதங்களுக்கு முன் செப்பணிடப்பட்டது.
இந்த சாலை வழியாக, வாலாஜாபாதில் இருந்து, சென்னைக்கு செல்வோர், ஊத்துக்காடு, புத்தகரம், கரூர், ராஜகுளம் வழியாக, சிறிய கார் முதல், கனரக வாகனங்கள் வரையில் செல்கின்றன.
மருதம் கூட்டு சாலை அருகே, புதிய தார் சாலை சேதம் ஏற்பட்டு பெயர்ந்த நிலையில் இருந்தது. அதை, ஒப்பந்தம் எடுத்தவர் தார் ஜல்லி கொட்டி சமப்படுத்தி உள்ளார். இருப்பினும், சீரமைக்கப்பட்ட சாலை மீண்டும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சேதமடைந்த சாலையை தரமான முறையில் செப்பணிட வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.