/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தபால்மேடு சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டுகோள்
/
தபால்மேடு சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டுகோள்
தபால்மேடு சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டுகோள்
தபால்மேடு சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டுகோள்
ADDED : ஜூன் 20, 2025 02:22 AM

ஸ்ரீபெரும்புதுார்:மாம்பாக்கம் ஊராட்சி, தபால்மேடு பகுதியில் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட தபால்மேடு பகுதியில் 50க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவுநீர் மற்றும் மழைநீர் வெளியேறும் வகையில், வடிகால் அமைக்கப்பட்டுள்ளது.
அதே போல, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் தபால்மேடு பகுதியில் சிறுபாலம் உள்ளது. இந்த நிலையில், வடிகால்வாய் மற்றும் சிறுபாலம் இணையும் இடத்தில், தடுப்பு இல்லாம் திறந்த நிலையில் கால்வாய் உள்ளது.
இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், தடுப்பு இல்லாத சிறுபாலத்தில் செல்லும் போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் உள்ள கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். பள்ளி குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் ஏற்றி செல்லும் பெண்கள் மற்றும் வயதானோர் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, தபால்மேடு சாலையில் உள்ள சிறுபாலத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.