/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆரம்ப சுகாதார நிலையம் பழையசீவரத்தில் ஏற்படுத்த கோரிக்கை
/
ஆரம்ப சுகாதார நிலையம் பழையசீவரத்தில் ஏற்படுத்த கோரிக்கை
ஆரம்ப சுகாதார நிலையம் பழையசீவரத்தில் ஏற்படுத்த கோரிக்கை
ஆரம்ப சுகாதார நிலையம் பழையசீவரத்தில் ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 17, 2025 12:14 AM
வாலாஜாபாத், பழையசீவரத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் ஊராட்சியில், 5,000 பேர் வசிக்கின்றனர். இப்பகுதியைச் சுற்றி, சங்கராபுரம், லிங்காபுரம், தோண்டாங்குளம், உள்ளாவூர், வரதாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களைச் சேர்ந்தோர், மருத்துவ சிகிச்சைக்கு செங்கல்பட்டு அல்லது வாலாஜாபாத் போன்ற பகுதிகளுக்கு செல்கின்றனர். இடைவெளி தூாரம் காரணமாக கர்ப்பிணியர் அவதிப்படுகின்றனர்.
குழந்தைகள் மற்றும் முதியோர் அவசரகால சிகிச்சைக்கு அவதிப்படும் நிலை உள்ளது.
மேலும், பழையசீவரம் எதிர்ப்புற பாலாற்றங்கரையொட்டி பல கிராமங்கள் உள்ளன.
இந்த கிராமங்களை சேர்ந்தோரும், அவசர, ஆபத்து நேரங்களில் பழையசீவரம் வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம் அல்லது செங்கல்பட்டில் உள்ள மருத்துவமனைக்கு செல்கின்றனர்.
இதனால், பழையசீவரத்தை சுற்றி உள்ள பல கிராம மக்களும் உரிய நேரத்தில் தேவையான சிகிச்சை கிடைக்காமல் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
எனவே, பழையசீவரம் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.