/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூர் - மேல்மருவத்துார் நேரடி பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
உத்திரமேரூர் - மேல்மருவத்துார் நேரடி பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை
உத்திரமேரூர் - மேல்மருவத்துார் நேரடி பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை
உத்திரமேரூர் - மேல்மருவத்துார் நேரடி பஸ் வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : மார் 14, 2024 11:41 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தோர், பல்வேறு காரணங்களுக்காக தினசரி மேல்மருவத்துார் செல்கின்றனர்.
உத்திரமேரூர் மற்றும் சுற்றிலும் உள்ள பகுதி வாசிகள், தென் மாவட்ட பகுதிகளுக்கு ரயில் வாயிலாக பயணிக்க வேண்டுமென்றால், பகல் மற்றும் இரவு நேரங்களில் மேல்மருவத்துார் ரயில் நிலையம் செல்லும் நிலை உள்ளது.
உத்திரமேரூரில் இருந்து மேல்மருவத்துார் செல்ல நேரடி பேருந்து வசதி இல்லாததால், மதுராந்தகம் சென்று அங்கிருந்து பேருந்து மாறி செல்லும் நிலை தொடர்கிறது.
இதனால், நேரம் விரயமாவதோடு 15 கி.மீ., துாரம் கூடுதலாக சுற்றிக் கொண்டு செல்லும் நிலை உள்ளது.
எனவே, உத்திரமேரூரில் இருந்து எல்.எண்டத்துார், செம்பூண்டி, கீழாமூர், அகிலி, சோத்துப்பாக்கம் கிராமங்கள் வழியாக மேல்மருவத்துார் மற்றும் அச்சிறுப்பாக்கம் வரை நேரடியாக அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.