/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : டிச 04, 2024 12:48 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, ஓரிக்கை, 45வது வார்டு வசந்தா அவென்யூவில் 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும், லட்சுமி வைகுந்தவள்ளி நகர், கே.எம்., அவென்யூ, எச்.எஸ்., அவென்யூ உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் வசந்தா அவென்யூ பிரதான சாலை வழியாக சென்று வருகின்றனர்.
பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில், மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், இப்பகுதியில் மழைக்காலத்தில் சாலையில் குளம்போல மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. இதனால், இப்பகுதியில் வசிப்போர் மழைநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளதால், சரும நோய் ஏற்படும் சூழல் உள்ளது.
மேலும், பள்ளி, கல்லுாரிக்கு ஷு அணிந்து செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். நாள் கணக்கில் தேங்கும் மழைநீரால் கொசுக்கள் அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, வசந்தா அவென்யூவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.