/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
'தாயுமானவர்' திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருள் வழங்க கோரிக்கை
/
'தாயுமானவர்' திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருள் வழங்க கோரிக்கை
'தாயுமானவர்' திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருள் வழங்க கோரிக்கை
'தாயுமானவர்' திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பொருள் வழங்க கோரிக்கை
ADDED : நவ 13, 2025 10:09 PM
காஞ்சிபுரம்: 'தாயுமானவர்' திட்டத்தில், அனைத்து மாற்றுத்திறனாளி களுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில், 644 ரேஷன் கடைகள், நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப் பாட்டில், 32 ரேஷன் கடைகள் என மொத்தம், 676 ரேஷன் கடைகளில், 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன.
இதில், 70 வயதிற்கு மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும், 'தாயுமானவர்' திட்டத்தில், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை கூட்டுறவு துறையினர் வழங்கி வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளின் ரேஷன் அட்டைதாரர் களுக்கு, 'தாயுமானவர்' திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சி புரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் கூறிய தாவது:
ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு, மற்றொருவரின் உதவியுடன் ரேஷன் கடைக்கு சென்று விரல் ரேகை வைத்து பொருட்களை வாங்க வேண்டி உள்ளது.
வீடு தேடி வரும், 'தாயுமானவர்' திட்டத்தில், எங்களையும் சேர்த்து ரேஷன் பொருட்கள் வழங்க செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, காஞ்சி புரம் மண்டல கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அனைத்து மாற்றுத் திறனாளிகளும், தாயுமானவர் திட்டத்தில் பயன் பெற அரசிடம் அனுமதி கேட்டு உள்ளோம்.
'ஒப்புதல் கிடைத்த வுடன் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தாயுமானவர் திட்டத்தில் பயன் பெறலாம்' என்றார்.

